BREAKING NEWS

அந்தியூரில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர்.

அந்தியூரில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி முனியப்பன் பாளையம் பகுதியில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஓ எஸ் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

தெற்கு ஒன்றிய செயலாளர் சேகர் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்எல் பரமசிவம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்சிஆர் கோபால் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சேஷ் முகைதீன் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்டத் தலைவர் செங்கோட்டையன் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன் பசுமைத்தாயகம் ராஜேந்திரன் முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முனியப்பன் பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியிலிருந்து விலகி தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )