அந்தியூர் அருகே அதிரடிப்படை முகாமில் காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் அருகே உள்ள தட்டகரை அதிரடிப்படை முகாமில் காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற தமிழக முன்னாள் காவல்துறை இயக்குனரும் முன்னாள் அதிரடி படை இயக்குனருமான வால்டர் தேவாரம் அதிரடிப்படை ஐஜி முருகன் அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஓய்வு பெற்ற அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளர்கள் அசோக் குமார் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டு நாட்டுக்காக வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு அலங்கரிக்கப்பட்ட தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் வீரமரணம் அடைந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
CATEGORIES ஈரோடு
TAGS காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதுதட்டகரை அதிரடிப்படை முகாம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்வீரமரணம் அடைந்த காவல்துறையினர்க்கு வீர வணக்கம்