BREAKING NEWS

அந்தியூர் அருகே குட்கா கடத்தி வந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அந்தியூர் அருகே குட்கா கடத்தி வந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

 

அந்தியூர் செய்தியாளர், பா.ஜெயக்குமார்.

 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல்துறை சோதனைச் சாவடியில் கடந்த மாதம் பர்கூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியாக நள்ளிரவு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில்,

 

மக்காச்சோளம் மூட்டைகளுக்கு அடியில் 55 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பவானி தானசாவடி வீதியைச் சேர்ந்த அருண் உட்பட 7 பேரை பர்கூர் போலீசார் கைது செய்தனர்.

 

இதில் முக்கிய குற்றவாளியான அருணை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன்ணுண்ணி இன்று அருணை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

அதற்கான உத்தரவு நகலை பர்கூர் போலீசார் பவானி கிளை சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )