அந்தியூர் அருகே கோழி கூண்டில் புகுந்த 5 அடி நீளமுள்ள நாகபாம்பு உயிருடன் மீட்கப்பட்டது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் தனது தோட்டத்தில் கூண்டு வைத்து கோழிகள் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று அந்த கோழி கூண்டில் பாம்பு இருப்பதை அறிந்த அவர் உடனடியாக அந்தியூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த அந்தியூர் தீயணைப்பு துறையினர் கோழி கூண்டில் இருந்த 5 அடி நீளம் உள்ள கொடிய விஷம் கொண்ட நாகபாம்பை உயிருடன் பிடித்து அந்தியூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
CATEGORIES ஈரோடு