அந்தியூர் அருகே சுமார் 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது.

செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
அந்தியூர் அருகே உள்ள ராமகவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவர் தனது வீட்டின் அருகில் பழைய பொருட்கள் சேமித்து வைத்துள்ள சாலை வீட்டில் நாகபாம்பு இருப்பதாக அந்தியூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற அந்தியூர் தீயணைப்பு துறை அலுவலர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி நாக பாம்பை உயிருடன் விட்டனர்.

பின்னர் பிடிபட்ட நாக பாம்பை தீயணைப்பு துறையினர் அந்தியூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் பின்னர் நாகபாம்பு வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
CATEGORIES Uncategorized
