அந்தியூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ராஜசேகர் என்பவர் பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் ராஜசேகர் கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது கடையிலிருந்து ஹான்ஸ் விமல் கூல்லிப் ஆகியவை 3887 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது பின்னர் போலீசார் கடையின் உரிமையாளரான ராஜசேகரை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
CATEGORIES Uncategorized
