BREAKING NEWS

அந்தியூர் அருகே யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது.

அந்தியூர் அருகே யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஈசப்பாறை செட்டியார் ஏரி பகுதியில் யானை தந்தத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயல்வதாக அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்தரசாமி மற்றும் வனவர் சக்திவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

 தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் செட்டியார் ஏரி பகுதிக்கு சென்று சோதனை நடத்தியதில் ஈசப்பாறை பகுதியைச் சேர்ந்த குருநாதன் (வயது 58) அண்ணமார் பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் (வயது 51) பர்கூர் பகுதியைச் சேர்ந்த முருகராஜ் (வயது 42 ) சித்தேஸ்வரன் (வயது 32) ஆகிய நான்கு பேரை சுற்றி வளைத்து,

 

அந்தியூர் வனச்சரக அலுவலகம் அழைத்து வந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் மூன்றையடி நீளமுள்ள யானை தந்தத்தை பறிமுதல் செய்து அவர்கள் நான்கு பேரையும் வனத்துறையினர் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )