BREAKING NEWS

அந்தியூர் அருகே வனப்பகுதியில் அமர்ந்து மது அருந்திய 6 பேருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம்.

அந்தியூர் அருகே வனப்பகுதியில் அமர்ந்து மது அருந்திய 6 பேருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம்.

அந்தியூர் அருகே உள்ள கொம்பு தூக்கி அம்மன் கோவில் வனப்பகுதியில் அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்திரசாமி தலைமையில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அங்கு வனப்பகுதியில் அமர்ந்து ஆறு பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

 

அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ். சதாசிவம். சார்லஸ். மணிகண்டன். நாகராஜ். மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யா. என தெரியவந்தது உடனடியாக அவர்களை கைது செய்து இதுகுறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்து அவரது உத்தரவின் பேரில் ஆறு பேருக்கும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )