அந்தியூர் காவல் நிலைய தலைமை காவலர் மாதேஸ்வரனுக்கு தமிழக முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் மாதேஸ்வரன் இவர் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டும் விதமாக குடியரசு தினமான இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்,
மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணுண்ணி இஆப மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் இகாபஆகியோர் மாதேஸ்வரனுக்கு முதலமைச்சர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.
முதலமைச்சர் பதக்கம் பெற்ற தலைமை காவலர் மாதேஸ்வரனுக்கு காவல்துறையினர் மற்றும் நண்பர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
CATEGORIES ஈரோடு
TAGS 74வது இந்திய குடியரசு தின விழாஅந்தியூர் காவல் நிலையம்ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்ஈரோடு மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்