அந்தியூர் தாலுகாவில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா பர்கூர் அ கிராமத்தில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய பர்கூர் வாக்குச்சாவடி நிலை அலுவலரும் பர்கூர் அ கிராம நிர்வாக அலுவலருமான பாபுவுக்கு,
ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான ஹெச் கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப. இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
உடன் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி சந்தோஷினி சந்திரா மற்றும் மாவட்ட தேர்தல் வட்டாட்சியர் திருமதி சிவகாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
CATEGORIES Uncategorized