அனுப்பர்பாளையம் மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்கள் ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரசி, சக்கரை, முழு கரும்பு உள்ளிட்டவகளை இன்று காலை மக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
அதனை தொடா்ந்து திருப்பூரில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகழக செயலாளர் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் ஆலோசனை படியும் திருப்பூர் தெற்கு மாநகரக் கழக செயலாளர் மாநில தொமுச துணைச் செயலாளர் மரியாதைக்குரிய டி.கே.டி.மு. நாகராசன்,
திருப்பூர் வடக்கு மாநகரக் கழக செயலாளர் மேயர் ந.தினேஷ் குமார் ஆகியோர்களின் வழி காட்டுதலின்படி திருப்பூர் வடக்கு மாநகரம் அனுப்பர்பாளையம் ஆத்துபாளையம் துணை மின் நிலையம் அருகேயுள்ள ரேசன் கடையில் நடைபெற்ற தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் நிகழ்வில்,
மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன், 10 வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு, வேலம்பாளையம் திமுகழக பகுதி செயலாளர் இராமதாஸ், 10 வது வார்டு திமுகழக செயலாளர் சசிகுமார், கோட்டா பாலு, ஈ.பி.ஜோதிபாசு மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு வழங்கினர்.