BREAKING NEWS

அனைவரும் சுதந்திர தினத்தன்று வீட்டில் தேசிய கொடியேற்றி பிரதமாின் ஆசையை நிரைவேற்ற வேண்டும் . மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

அனைவரும் சுதந்திர தினத்தன்று வீட்டில் தேசிய கொடியேற்றி பிரதமாின் ஆசையை நிரைவேற்ற வேண்டும் . மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பாரதியார் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன் கலந்து கொண்டு பேசுகையில்


75வது சுதந்திர தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார் .இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும், எண்ணற்ற தியாகிகளை போற்றும் விதமாகவும், நமது தேசியக் கொடியின் அருமை மற்றும் புகழை, பெருமையை அறிந்து கொள்ளும் வகையில் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம்.கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, குஜராத் முதல் அசாம் வரை என அனைத்து பகுதிகளிலும் தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கிறது.சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்ட 75 மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டதில் தூத்துக்குடி மாவட்டமும் உண்டு. அது நமக்கு மேலும் பெருமை சேர்க்க கூடியதாக உள்ளது.

வெள்ளையனை விரட்டிய வீரம் தழுவிய பூமி நம்முடைய தூத்துக்குடிஎன்றும் , தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 8 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. ஒவ்வொரு இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றி மக்கள் உள்ளம் தோறும், தேசிய சிந்தனையை மேலும் வலுப்படுத்த வேண்டும்.இன்று இளைஞர்கள் சகோதரிகள் ராணுவத்தில் இணைந்து பணியாற்றுவதற்காக அக்னி பாத் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார். அக்னி பாத் திட்டத்தில் சேர பல லட்சம் இளைஞர்கள் தயாராக உள்ளனர் என்றார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )