BREAKING NEWS

தஞ்சையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதி கட்டுமான பணி, சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு.

தஞ்சையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி  மாணவிகள் விடுதி கட்டுமான பணி, சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு.

   

     தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி வளாகத்தில் அரசு ஆதிதிராவிடர் நல 50 கல்லூரி மாணவிகள் விடுதி கட்டும் பணி ரூபாய் 126 லட்சத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் இந்த கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில் உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், கிருஷ்ணசாமி , தமிழரசி உள்ளிட்ட குழுவினர் மாணவிகள் விடுதியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.இதைத் தொடர்ந்து அந்த குழுவினர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருந்து கிடங்கு, துணை மின் நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )