அன்பு நட்பு காதலை பரிமாறிக் கொள்ள தஞ்சையில் கூபிட்ச் கார்னர் (Cupids Corner) லவ் லாக்(love lock) காதல் தூதுவன்

தஞ்சாவூரை சேர்ந்த பிரபாஹரன்வீரராஜ்(31) நிஷாந்த்(27) ஆகிய இரு பட்டதாரி நண்பர்கள் தஞ்சை குழந்தை இயேசு கோவில் பகுதியில் கபே (cafe) வைத்துள்ளனர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட கபேயில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

இங்கு சிற்றுண்டி மற்றும் பழரசம் குடிக்க வரும் காதலர்கள்,நண்பர்கள், பொதுமக்கள் தங்களது காதல் நட்பு அன்பு மற்றும் கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

பின்னர் நட்பு அன்பு காதல் ஆகியவை பிரிந்து விடாமல் இருப்பதற்காக லவ் லாக் பூட்டுகளை பூட்டி சாவியை கபேயில் உள்ள பெட்டியில் போட்டு விடுகின்றனர் நிறைய பேர் சாவியை பெட்டியில் போடுவதால் எந்த பூட்டு எந்த சாவி என்பது தெரியாது.
இதனால் பூட்டை மீண்டும் திறக்க முடியாது மேலும் சிலர் சாவியை அவர்களே அன்பின் அடையாளமாக பரிமாறி கொள்கின்றனர் தங்களது அன்பு பிரியாமல் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையால் லவ் லாக் பூட்டுகளை பூட்டுகின்றனர்.

தங்களது அன்பை பரிமாறிக் கொள்வதற்காக இந்த கபே ஒரு தளமாக அமைந்துள்ளது அதை போல் நண்பர்களும் தங்களது நட்பு பிரிந்து விடாமல் இருப்பதற்காக இக்கடையில் லவ் லாக் பூட்டு போட்டு தங்களது பெயர்களை பூட்டில் எழுதி வைக்கின்றனர்.

இதேபோல் நூற்றுக்கு மேற்பட்ட லவ் லாக் பூட்டுக்கள் கபேயில் நட்பின் அன்பின் அடையாளமாக உயிரோட்டத்துடன் தொங்குகின்றன, மேலும் முன்பு சிற்றுண்டி உண்ண வருபவர்கள் தங்களது கமெண்ட் எழுதி வந்த நிலையில் பின்னர் அவர்கள் தங்களது மனதில் பட்ட சிந்தனைகளை துண்டு சீட்டில் எழுதி வைத்துள்ளனர்.

இதுவும் அப்படியே பாதுகாப்பாக அங்கு உள்ளது இதனால் இங்கு வரும் இளைஞர்கள் நண்பர்கள் காதலர்கள் உறவினர்கள் உணவு அருந்தி வயிறு நிறைவடைவது மட்டுமல்லாமல் மகிழ்ச்சியுடன் தங்களது அன்பு நட்பு காதலையும் பரிமாறி மன நிறைவு அடைகின்றனர்.

மேலும் சினிமா இயக்குநர் கிட்டு சினிமா நடிகர்கள் திருமுருகன், மகேந்திரன் ஆகியோரும் இங்கு வந்து தங்களது கருத்துக்களை எழுதி வைத்துள்ளனர் மொத்தத்தில் இந்த கபே குடும்பங்கள் நட்புகள் காதலர்கள் அன்பை பரிமாறும் காதல் தூதுவனாக உள்ளது
