BREAKING NEWS

அப்பமசமுத்திரம் குடியிருப்பு வீட்டில் இருந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு.

அப்பமசமுத்திரம் குடியிருப்பு வீட்டில் இருந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அப்பமசமுத்திரம் கிராமத்தில் கிருஷ்ணன் மகன் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார்.

 

அவர் இன்று காலை விவசாயி தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு சென்றபோது வீட்டில் ஏதோ சத்தம் கேட்பதாக அறிந்த அவர் அப்பகுதியில் சென்று பார்த்தபோது அங்கு பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அப்பமசமுத்திரம் கிராமத்திற்கு விரைந்து வந்து வெங்கடேசன் வீட்டில் இருந்த பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு உயிருடன் பிடித்து வனத்துறையிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )