அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தஞ்சையில் பேட்டி.

பாராளுமன்றத் தேர்தலுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம் இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முத்திரை பதிக்கும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஒரு சிறப்பாக பணியில் ஈடுபடும்.
தலையில்லா முண்டமாக அதிமுக உள்ளது எடப்பாடி பழனிச்சாமி ஒரு புறமும் பன்னீர்செல்வம் ஒருபுறமும் பிரிந்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரை தான் இந்த கட்சி தலைவராக தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது.
தற்போது இது செயல்படாத இயக்கமாக உள்ளது. நான்கு மாதத்திற்குள் பொதுச் செயலாளர் தேர்தல் வைக்காததால் அவர் இடைக்கால பொதுச் செயலாளர் என்று சொல்வது தவறு.
பழனிச்சாமி இயக்கத்தை அளிக்க வேண்டும் என்று சுயநலத்தோடு செயல்படுகிறார் இரட்டலையே செயல்படாமல் இருக்கிறது.
பழனிச்சாமி உடன் இருந்து ஆட்சியை காப்பாற்றிய பன்னீர்செல்வத்தை வெளியேற்றி இருக்கிறார் வேறு வழி இல்லாமல் பன்னீர்செல்வம் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த கட்சியின் எதிர்காலமே நீதிமன்றத்தின் கையில் உள்ளதற்கு பழனிச்சாமி தான் காரணம்.
திமுக வழக்கு ஏதும் தொடர்ந்து விடக்கூடாது என்பதற்காக தன் கட்சியை அளிக்கிற நிலைக்கு சென்று விட்டார் கட்சியை பலவீனப்படுத்தினால் திமுகவின் தான் லாபம்.
துரோகம் செய்துவிட்டு சுயநலத்தின் உச்சத்தில் இருந்து செயல்படு. அவருக்கு ஒரு வீழ்ச்சி வந்தால் இயக்கத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் நல்லதொரு முடிவாக இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் போது பன்னீர்செல்வத்தை சந்திப்பேன்.
கருணாநிதி குடும்பம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஆக்டோபஸ் போல் எல்லா துறைகளிலும் நுழைந்து தங்கள் குடும்பமும் தான் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கிறார்கள்.
அதிக தயாரிப்பாளர்கள் இவர்கள் சொல்லும் தேதியில் தான் ரிலிஸ் செய்ய வேண்டும், இவர்கள் சொன்னால் தான் ரிலீஸ் செய்ய வேண்டும். ஒரு சர்வாதிகாரம் போல் செயல்பட்டு கொண்டிருகிறார்கள்.
உண்மையாகச் ஜெயின்ட் நிறுவனம் அரக்கனாக செயல்பட்டு வருகிறது. இதற்கு விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.