அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இதற்கிடையே பாசனத்துக்காக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து 62 அடியாக இருந்தது இந்நிலையில் 5 மாத இடைவெளிக்குப் பின் நேற்று முன்தினம் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறும்போது அமராவதி அணையின் உயரம் 90 அடி 4 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்டது நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 430 கன அடி நீர் வரத்து உள்ளது அணையின் நீர்மட்டம் 63 அடியாக உள்ளது என்றனர்.
CATEGORIES திருப்பூர்
