BREAKING NEWS

அமைச்சர் வருகைக்காக வெயிலில் 5 மணி நேரம் மேய்ச்சல் இன்றி காத்திருந்த கால்நடைகள், பொதுமக்கள் வேதனை.

அமைச்சர் வருகைக்காக வெயிலில் 5 மணி நேரம் மேய்ச்சல் இன்றி காத்திருந்த கால்நடைகள், பொதுமக்கள் வேதனை.

 

தஞ்சாவூர் மாவட்டம் சென்னம்பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் துவக்க விழா காலை 10 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

 

இந்நிலையில் காலை 8 மணிக்கே பொதுமக்கள் தங்களது வீட்டு பசுமாடுகள், கன்றுகள் மற்றும் கால்நடைகளை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு கொண்டு வந்து கட்டி வைத்து விட்டனர்., இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முகாமினை துவக்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

 

இதனையடுத்து அமைச்சர் மகேஷ் தனியார் நிகழ்ச்சி மற்றும் திமுக கட்சி கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்ற பின்னர் மதியம் 1:30 மணிக்கு முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு வந்தார்.

 

 

சுமார் 5 மணி நேரம் மாடுகள் வெயிலில் நின்று கொண்டும் தண்ணீர் இன்றியும் மேய்ச்சலுக்கு செல்லாமலும் அம்மா என்று கத்திக் கொண்டு இருந்தன இதனால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்து புலம்பி கொண்டு இருந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )