BREAKING NEWS

அம்மாபேட்டையில் தூர் வாராத வாய்க்காலில் மண்டியுள்ள ஆள் உயர கோரைப் புற்களுடன் வந்து விவசாயிகள் தஞ்சை ஆட்சியரிடம் மனு அளித்தனர்

அம்மாபேட்டையில் தூர் வாராத வாய்க்காலில் மண்டியுள்ள ஆள் உயர கோரைப் புற்களுடன் வந்து விவசாயிகள் தஞ்சை ஆட்சியரிடம் மனு அளித்தனர்

தஞ்சையில் இருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் இருபுறங்களிலும் இருந்துவந்த வடிகால் வாய்க்கால் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை தூர்ந்து போய் அடர்ந்த புதர்கள் ஆள் உயரத்துக்கு மண்டி உள்ளது.

இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வடிவதில் தேக்கம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அவலம் உள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆள் உயர கோரைப்புற்களுடன் வந்து கோரிக்கை மனு அளித்தனர் உடனடியாக தூர்வார வில்லை என்றால் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )