அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள், தேட வேண்டாம்.. கடிதம் எழுதி வைத்து விட்டு தீபாவளிக்கு எடுத்த புது துணியுடன் 2 மாணவிகள் மாயம்..

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன் படடியில் 12 – ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகி விட்டனர்.
பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 2 தோழிகளும், நேற்று டியூஷனுக்கு செல்வதாக கூறிவிட்டு, தீபாவளிக்கு எடுத்த புது துணிகளை எடுத்துக்கொண்டு மாயமாகியுள்ளனர்.
அவர்களில் ஒரு மாணவி, என்னை மன்னித்து விடுங்கள் தேட வேண்டாம் என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தீபாவளி பண்டிகை தருணத்தில் மாணவிகளிள் திடீர் மாயம் பெற்றோரை அச்சமடையச் செய்துள்ளது . அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
CATEGORIES திண்டுக்கல்
TAGS 12 - ம் வகுப்பு மாணவிகள் மாயம்2 மாணவிகள் மாயம்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திண்டுக்கல் மாவட்டம்பட்டிவீரன் படடி