அரக்கோணம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மின்சார வயர்களை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்
அரக்கோணம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மின்சார வயர்களை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலி ஒன்றியத்துக்குட்பட்ட ஆட்டுப்பாக்கம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது இங்கு நாள்தோறும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவத்திற்காக வந்து செல்கின்றனர் இந்நிலையில் இங்கு அமைக்கப்பட்ட மின்சாதன பொருட்களின் வயர்கள் பாதுகாப்பின்றி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் காணப்படுகிறது இதனை உடனடியாக சீரமைக்க கோரி பலமுறை ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாகமும் அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் பொது மக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையில் காணப்படும் இந்த மின் வயர்களை உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.