அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அடிபோட்ட அமைச்சர் துரைமுருகன்

வாழ்வும் சாவும் என்னை ஒன்னும் பண்ணாது தேர்தலில் டாக்டர் பட்டம் வாங்கியவன் நான். 13 வது முறையும் என்னை வெற்றி பெற செய்வார்கள்
அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அடிபோட்ட அமைச்சர் துரைமுருகன்
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் இறுதியாக அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் எனக்கு ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை, கலைஞர் தான் என்னை போட்டியிடச் சொன்னார் என்னிடம் தேர்தலுக்கு பணம் இல்லை என சொன்னபோது கலைஞரும், அண்ணியாரும் பணம் கொடுத்து உதவினார்கள்.
ஆரம்பத்தில் ஆசை எனக்கு வரவில்லை ஆனால் ஆசை வந்த பிறகு இந்த இடத்தில் நிலைத்து நிற்கிறேன் இன்று வரை பேசுகிறேன். ஆகையால் இப்போதும் சொல்கிறேன் 12 முறை என்னை வெற்றி பெற செய்தீர்கள் 13-வது முறையும் என வெற்றி பெற செய்வீர்கள்.
டேய்.சாவும், வாழ்வும் என்னை ஒன்னும் பண்ணாது துரைமுருகன் இதில் கில்லாடி தேர்தலில் டாக்டர் பட்டம் வாங்கியவன் நான் 26 தேர்தலை சந்தித்து இருக்கிறேன் ஆகையால் என்னிடம் வேண்டாம் என பேசி முடித்தார்.
நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அடி போட்டதாகவே இந்த பேச்சு அமைந்துள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.