அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் தேர்வு!!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் தேர்வு!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. நடப்பு கல்வியாண்டில் பிப்ரவரி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடைபெற்றன. பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கோடை வெயில் அதிகமாக இருந்ததால் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க எஸ்சிஇஆர்டி பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆங்கில புலமையை திறன் வாய்ந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் முன்னிலையில் ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்கள் ஆங்கிலத்தை சரளமாக பேசுவதில் திறனும், கற்பித்தலில் ஆர்வமும் உள்ள ஆசிரியர்களை ஆன்லைனில் தேர்வு செய்ய வேண்டும் எனவும் இவர்களை கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்படும் .
தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் அரை மணிநேரம் தேர்வு நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், அரசுப் பள்ளிகளில் 4 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Spoken English பயிற்சி வகுப்பு வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே அமலுக்கு வரும் என்றும் முன்னதாக தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மே30, 31 தேதிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.