அரசு டாஸ்மாக் மதுபான கடையில் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டிய இரண்டு டிப்டாப் ஆசாமிகளை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம்,
வாழப்பாடி அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடையில் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டிய இரண்டு டிப்டாப் ஆசாமிகளை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 218 அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது, இதனிடையே டாஸ்மாக் கடையின் உயர் அதிகாரிகள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஒவ்வொரு சரக்கு பாட்டிலின் மீதும் அரசு நிர்ணயித்த விலையை விட 5 ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்ய வேண்டுமென்று வாய்மொழி உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்,
டாஸ்மாக் ஊழியர்களுக்கு மற்றொரு தலைவழியாக கடந்த ஒரு வாரமாக கரூர் குரூப்ஸ் என்று சிலர் ஒவ்வொரு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு சென்று ஒவ்வொரு மாதமும் கடை ஒன்றுக்கு ஒரு இலட்சரூபாய் மாமூல் தரவேண்டுமென மிரட்டி பணம் வசூலித்து வருவதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்னிலையில் நேற்றிரவு வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி அரசு டாஸ்மாக் கடைக்கு வந்த இரண்டு டிப்டாப் ஆசாமிகள் நாங்கள் கரூரில் இருந்து வந்துள்ளோம் என்றும் மாதந்தோறும் வழங்க வேண்டிய மாமூல் பணத்தை அண்ணன் வாங்கி வரச்சொன்னார் என்று தெரிவித்துள்ளனர்.
சுதாரித்து கொண்ட கடை ஊழியர்கள் அவர்களை வீடியோ எடுத்து கொண்டு இருவரையும் வாழப்பாடி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர், போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அரசு டாஸ்மாக் கடையில் மாமூல் கேட்டு வந்த டிப்டாப் ஆசாமிகளை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.