BREAKING NEWS

அரசு பள்ளி மாணவிகளுக்கு ஒருநாள் உழைப்பை தானம் செய்த வேலூர் தச்சு தொழிலாளர்கள்!

அரசு பள்ளி மாணவிகளுக்கு ஒருநாள் உழைப்பை தானம் செய்த வேலூர் தச்சு தொழிலாளர்கள்!

வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட தச்சு தொழிலாளர்கள் அரசு பள்ளி மாணவிகளுக்காக தங்களின் “ஒரு நாள் உழைப்பை தானமாக” வழங்கியதற்கு அச்சங்கத்தின் அகில இந்திய கட்டுமான தொழிற்சங்க மாநில தலைவர் பாலகணேஷ் தச்சு தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

இதில் மாநிலத் துணைத் தலைவர் எம்.தங்கராஜ், கிழக்கு பகுதி ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உட்பட மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பள்ளியில் பழுதடைந்து இருந்த பெஞ்ச் மற்றும் மேஜைகளை சீர்படுத்தி கொடுத்து பள்ளி மாணவிகளுக்கு உதவியதை பொதுமக்களும் மனதார பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS