அரசு பேருந்தில் நடத்துனரிடம் ரகளையில் ஈடுபட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுனர்.

திருப்பூர்: உடுமலைபேட்டை அரசு பேருந்தில் நடத்துனரிடம் ரகளையில் ஈடுபட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுனர், நடத்துனர் காவல்துறையினர் விசாரணை.
உடுமலைபேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மூன்றுபேர் படியில் நிற்பதில் போட்டிபோட்டு நடந்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடத்துனர் கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளில் பேசியதாவும் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு இடையூறு செய்தவும் உடுமலைபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்பு காவல்துறையினர் அந்த மாணவர் அழைத்து விசாரணை செய்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.
CATEGORIES திருப்பூர்