அரசு பேருந்து நடத்துனர் அடித்து கொலை!! ஓடும் பேருந்தில் அதிர்ச்சி!!!
அரசு பேருந்து நடத்துனர் அடித்து கொலை!! ஓடும் பேருந்தில் அதிர்ச்சி!!!
சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துநரைப் பயணி ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரத்திற்கு அரசு பேருந்து சென்றது. விழுப்புரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது, மதுபோதையில் பயணி ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார்.
மது போதையில் இருந்த நபரிம் நடத்துநர் டிக்கெட் எடுக்க கூறியுள்ளார். ஆனால் போதை ஆசாமியே டிக்கெட் எடுக்க முடியாது என கூறியதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதை சக பயணிகள் தடுத்தனர். ஆனால், போதை வாலிபர் தாக்கியதில் நடத்துநர் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து நடத்துநரை பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மேல்மருத்துவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மதுராந்தகம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த நடத்துநர் விழுப்புரம் கோட்டம் பணிமனையில் பணிபுரிந்து வரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் (54) என்பது தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய போதை ஆசாமியை காவல் துறை தீவிரமாக தேடி வந்தநிலையில், சூணாம்பேடு பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.