BREAKING NEWS

அரசு மருத்துவமனையில் ஆசிட் குடித்த நர்சிங் மாணவி உயிரிழப்பு திருட்டு பழி சுமயத்தியதால் விபரீத முடிவு.

அரசு மருத்துவமனையில் ஆசிட் குடித்த நர்சிங் மாணவி உயிரிழப்பு  திருட்டு பழி சுமயத்தியதால் விபரீத முடிவு.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி ஆசிட் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடிசந்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் குமாரலிங்கம். இவரது மகள் மீனாட்சி (22), தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நர்சிங் மூன்றாமாண்டு படித்து வருகிறார். மேலும் மருத்துவமனையில் பயிற்சி நர்சாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் உடன் படிக்கும் ஒரு மாணவியின் செயின் காணாமல் போனதாக கூறப்படுகிறது. செயினை மீனாட்சி தான் எடுத்திருக்கலாம் என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதாகவும், இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

தன்மீது திருட்டு பழி சுமத்தி விட்டார்களே என்று மன உளைச்சல் அடைந்த மீனாட்சி அரசு மருத்துவமனையில் ஆசிட்டை எடுத்து குடித்து விட்டாராம். சிறிது நேரத்தில் மயங்கி கிடந்த அவரை பார்த்த சக மாணவிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் அவரது உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவரது பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்து, மகள் சாவுக்கு நீதி வேண்டும். பிரேத பரிசோதனை கூடம் அருகே போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தைக்கு பின் இன்று மீனாட்சியின் உடலை பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர் இந்த சம்பவம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )