அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை 44வது சதுரங்க ஒலிம்பியாட் 2022 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்காக சதுரங்க விளையாட்டு போட்டி மாவட்ட அளவில் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இதில் தலைமைஆசிரியர் தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா M.முருகன் வருகை புரிந்தார் மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலரும் சீர்காழி மாவட்ட கல்வி அலுவலரும் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் பேரூராட்சி துணைத் தலைவர் சம்சுதீன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியா விஜய் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் மேனகா கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியினை துவங்கி வைத்தனர்.
இறுதியாக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி அவர்கள் நன்றி உரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் உடன் தொகுப்பாளர் சாமிநாதன் உடற்கல்வி ஆசிரியர் தொகுத்து வழங்கினார்.
