BREAKING NEWS

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசியில் 40 வது கண் தான விழிப்புணர்வு இரு வார விழா

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசியில் 40 வது கண் தான விழிப்புணர்வு இரு வார விழா

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசியில் 40வது கண்தான விழிப்புணர்வு இரு வார விழா ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் பகுதியாக கண் பிரிவு வெளி நோயாளிகள் பகுதியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் மரு செல்வ பாலா அவர்களது தலைமையில் கண் மருத்துவர் மரு ராஜலட்சுமி அவர்களால் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் 04-09-2025 அன்று மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா ஜெஸ்லின் அவர்களது தலைமையில் மூத்த கண் மருத்துவர் மரு ராஜலட்சுமி அவர்கள் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள்,

செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலிய மாணவிகளுக்கு கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல வகையான போட்டிகளை நடத்தினர்.

ஓவியப்போட்டி கவிதை போட்டி மற்றும் பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழிப்புணர்வு சிற்றேடுகளும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு மக்களை ஊக்குவித்தனர்.

சிற்றேடுகளில் கண் தானம் பற்றிய முழு விவரங்கள் மற்றும் அதன் பலன்கள் போன்றவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் கண் மருத்துவர் கண் மருத்துவப் பகுதியில் உதவியாளர்கள் செவிலியர்கள் பேராசிரியர்கள் செவிலிய மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர் மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா ஜெஸ்லின் அவர்கள் பேசும் பொழுது விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம்..

கண் தானம் செய்வோம்
தானங்களில் சிறந்தது கண்தானம் என்று பலமுறை கேள்விப்பட்டிருப்போம்.

போதுமான விழிப்புணர்வு இல்லாமல் தினமும் எத்தனையோ உடல்கள் கண்களோடு கருவிழிகளோடு புதைக்கவோ எரிக்கவோ படுகின்றன.

கண்தானத்தின் அவசியம் குறித்தும் அது எப்படியெல்லாம் செய்யப்படுகிறது என்றும் விளக்குகிறார்.

பொது மக்கள் அனைவரும் கண் தானம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ் வசதிகள் அரசு வலைதளத்தில் இணையதளம் மூலமாக (https://tnehms.tn.gov.in/e-services)பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

விழாவின் முடிவில் கண் மருத்துவர் ராஜாலட்சுமி அவர்கள் பரிசு வழங்கி ஊக்கப்படுத்திய மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா ஜெஸ்லின் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்தார்.

இந்த விழாவினை சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்த கண் மருத்துவர் மற்றும் கண் மருத்துவ பிரிவில் உள்ள பணியாளர்கள் அனைவரையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார் .

இவ்விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அவர்களால் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS