அரியலூர் அருகே தத்தனூர் – மணகெதி சுங்கச்சாவடி முன்பு தேமுதிக-வினர் ஆர்ப்பாட்டம்.
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து இன்று அரியலூர் மாவட்டம், தத்தனூர் – மணகெதி சுங்கச்சாவடி முன்பு தேமுதிக வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது. நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் ராம.ஜெயவேல் தலைமை வகித்தார். கட்சியினர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
TAGS dmdkஅரசியல்அரியலூர்அரியலூர் மாவட்டம்சுங்கச்சாவடி கட்டண உயர்வுசுங்கச்சாவடி கட்டணம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேமுதிக