அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி விழா.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 2019ல் கும்பாபிஷேகம் நடைபெற்று அதன் பிறகு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக கோவிலில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை.
அதன் பிறகு தற்போது ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருவிழா நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டு, துரோபதி அம்மனுக்கு கொடியேற்றி காப்பு கட்டி விழாவை தொடங்கினர். அதன் பின் 3 மாதம் காலமாக மகாபாரதம் பாடி அதைச் சுற்றியுள்ள 8 கிராம பொதுமக்கள் அவர்களுடைய குடும்ப வழிபாடான மண்டாபிடி என்னும் நிகழ்ச்சியை நடத்தி வந்தனர்.
மேலும் அரவான் களபலி நிகழ்ச்சி நடத்தி மேலும் இறுதி நாளான திரௌபதி அம்மனை பல வண்ண மலர்களால் அலங்கரித்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து அம்மனின் அருளால் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து அவர்களுடைய வேண்டுதலை நிறைவேற்றி அம்மனின் அருளை பெற்று சென்றனர். மேலும் இந்த திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் தங்களுடைய குடும்பத்தோடு அம்மனை வழிபட்டு அருளை பெற்று சென்றனர்.