அருந்ததியின மக்களுக்காக தன்னுயிர் நீத்த தியாகி நீலவேந்தனின் 9 ஆண்டு நினைவுநாள்; தமிழ் புலிகள் கட்சியினர் அஞ்சலி.

திருப்பூரில் அருந்ததியின மக்களுக்காக தன்னுயிர் நீத்த தியாகி நீலவேந்தனின் 9 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆதித் தமிழர் பேரவையின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்தவர் நீலவேந்தன் இவர் அருந்ததியின மக்களுக்கு 6 சதவீத இட ஒதுக்கீடு கோரி கடந்த 2013 ஆம் ஆண்டு இதே நாளில் திருப்பூர் குமரன் பூங்கா அருகில் தன் உயிரையும் துச்சமாக நினைத்து அருந்ததியின மக்களுக்காக தன் உயிரைத் தீயிட்டு மாய்த்துக் கொண்டார்.

இந்நிலையில் நீலவெந்தனின் 9ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் வாவி பாளையம் பகுதியில் தமிழ் புலிகள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர். கனகசபாபதி தலைமையில் நீலவேந்தன் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர். இளவேனில்,மக்கள் பாதுகாப்பு அமைப்பு தலைவர்.கார்மேகம்,மாவட்ட தலைவர். செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர். கோவிந்தசாமி உள்ளிட்ட தமிழ்புலிகள் கட்சியினரும் பொதுமக்களும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
