அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதியம்மன் திருக்கோவிலில் மேற்கூறை சீரமைக்கும் பணி அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்.
-நெல்லை செய்தியாளர் மகாதேவன்
திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதியம்மன் திருக்கோவிலில் ரூ.4.03 கோடி மதிப்பீட்டில் அம்மன் சன்னதி மேற்கு பிரகார மண்டபம் மற்றும் கருஉருமாறி தீர்த்தக்குளம் அம்மன் சன்னதி மேற்கூறை தட்டோடு சீரமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று துவக்கி வைத்தார்கள்.
உடன் இந்து சமயஅறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப்,.
திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன் மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் இருந்தனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS அரசியல்ஆன்மிகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதியம்மன் திருக்கோவில் சீரமைப்பு பணி