BREAKING NEWS

அருவியில் குளிக்கத் தடை ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப்பயணிகள்.

அருவியில் குளிக்கத் தடை ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப்பயணிகள்.

 

தேனி மாவட்டத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இதனை கண்டுகளிக்கவும், அருவிகளில் குளித்து ஆட்டம் போடவும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவர். கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இந்த அருவிக்கு நீர்வரத்து வரும் நிலையில்,  அப்பகுதி வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைவர்.  அதிலும் கோடை  மற்றும் விடுமுறை தினங்களில்  சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களாக குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை விடுமுறையை சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சிமலை  – வட்டகணல் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.. மேலும்  நீர்வரத்து சரியான பிறகு அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )