அறம் செய்திகள் எதிரொலி ..!!

– செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள தெருக்களில் கால்வாய் தூர்வரப்படாமல் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் துர்நாற்றம் வீசுவதால்,
அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது என்றும் போர்க்கால அடிப்படையில் சுகாதார பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று நேற்று நமது அறம் செய்திகள் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி மற்றும் ஊராட்சி செயலாளர் தங்க.வெங்கடேசனை தொடர்பு கொண்டு இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று கழிவுநீர் தேங்கி இருந்த கால்வாயை தூர்வாரி பிளீச்சிங் பவுடர் போட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் நடவடிக்கை மேற்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் மற்றும் செய்தி வெளியீடு செய்த அறம் செய்திகளுக்கும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.