BREAKING NEWS

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் சர்வதேச சிறுதானியங்கள், மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா துவக்கி வைத்தார்.

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் சர்வதேச சிறுதானியங்கள், மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா துவக்கி வைத்தார்.

 

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டலம் சார்பாக தேனி என். ஆர்.டி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய விளக்கங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் தியாகங்கள் உள்ளிட்டவை குறித்து காட்சி படுத்தப்பட்டுள்ளன.

 

 

நிகழ்ச்சியின் தொடக்கமாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் எம்.அண்ணாதுரை ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டனர்.

 

பின்னர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

தொழில் தொடங்குவதற்கு பல்வேறு கடன் உதவிகளை அரசு வழங்கி வருவதாகவும் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு புதிய தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என வலியுறுத்தினார்.

 

 

இதேபோல் கல்லூரி மாணவ மாணவியர்களும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அரசின் திட்டங்களை அறிந்து அதற்கு ஏற்ப தங்களின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என கூறினார்.

 

 

இதில் பங்கேற்று விழா தலைமை உரையாற்றிய மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் எம்.அண்ணாதுரை பேசுகையில்.,

 

 

அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் என்று குறிப்பிடுவதை காட்டிலும் நாம் அறிந்திராத வீரர்கள் என்று குறிப்பிடுவதே சிறந்ததாக இருக்கும்

நிகழ்ச்சியின இறுதியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS