அறையில் புகுந்த நாகப்பாம்பு – தூங்காமல் தவித்த குடும்பத்தினர்!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் கல்லாபுரம் ஊராட்சிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு பின்புறம் முருகேசன் என்பவரது வீட்டில் நேற்று இரவு வீட்டில் இருந்த படுக்கை அறைக்கு சென்ற போது நாகபாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இரவு நேரம் என்பதால் நாகபாம்பு இருந்த அறையை மட்டும் பூட்டிய முருகேசன் மற்றும் குடும்பத்தினர் விடிய விடிய தூங்காமல் அச்சத்துடன் இருந்துள்ளனர்.


இதற்கிடையில் காலையில் உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் நிலைய அதிகாரி கோபாலகிருஷ்ணன் தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வீட்டுக்குள் இருந்த படுக்கை அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை அரை மணி நேரம் போராடி பிடித்து அமராவதி வனப்பகுதியில் விட்டதால் முருகேசன் குடும்பத்தினர் பெரும் நிம்மதி அடைந்தனர்
CATEGORIES திருப்பூர்
