அலங்காநல்லூரில் திமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய அவை தலைவர் நடராஜன், பேரூர் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
பேரூராட்சி துணை சேர்மன் சுவாமிநாதன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்க மதுரை வருவதையொட்டி அவருக்கு அலங்காநல்லூர் ஒன்றிய, பேரூர் கழகம் சார்பில் உற்சாக வரவேற்பளிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில் ஒன்றிய சேர்மன் பஞ்சு, துணைச் சேர்மன் சங்கீதா மணிமாறன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி சந்தனகருப்பு, மாணவரணி பிரதாப் ஆகியோர் நன்றி கூறினர்.
