அலங்காநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயற்குழு கூட்டம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை சமுதாயக்கூடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் கிட்டு என்ற கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துபாண்டி, இளைஞரணி தலைவர் சரவணன், மதுரை மாவட்ட வன்னியர் சங்க தலைவர் நடராஜன், மாவட்ட துணை தலைவர் பிரபு, துணை செயளாலர் சின்னதுரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சீரும் சிறப்புமாக நடைபெற வேண்டும், நாட்டு மாடு இனங்களை மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்,
கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது, கிளைகளை பலப்படுத்தி அதிகளவில் கட்சியின் கொடி ஏற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் முடுவார்பட்டி கிளை செயலாளர் நாராயணன், ஒன்றிய பொருறாளர் ரேவதி நன்றி ஆகியோர் கூறினார்.