அலங்காநல்லூர் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மேற்கு ஒன்றியம் கோட்டைமேடு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதற்கு மேற்கு மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், தொகுதி செயலாளர் சக்கரபாணி, ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றி குமரன் இருளாண்டி, நாடாளுமன்ற பொறுப்பாளர் சிவானந்தம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் நூல், பேனா, நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினர்.
முன்னதாக பாலமேடு, அலங்காநல்லூர், பெரியஊர்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.