அலங்காநல்லூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் மீனாட்சி, மாவட்ட குழு ராக்கம்மாள், பாண்டி, திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணை 52ன் படி தொடர்ச்சியாக 100 நாள் வேலை அரசு நிர்ணயிக்கும் முழு ஊதியத்தை வழங்க கோரியும், புதியதாக விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை அட்டையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும்,
மாற்றுத்திறனாளிகள் அதிகம் வேலை செய்யும் இடங்களில் ஒரு மாற்றுத்திறனாளியை பணித்தள பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளியிடம் கோரிக்கை மனு அளித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.