BREAKING NEWS

அழகு முத்துக்கோனின் வாரிசுகளுக்கு அரசு சார்பில் உரிய மரியாதை செலுத்தாததால் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாராங் குளத்தில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் மணிமண்டபத்தில் பரபரப்பு.

அழகு முத்துக்கோனின் வாரிசுகளுக்கு  அரசு சார்பில் உரிய மரியாதை செலுத்தாததால் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாராங் குளத்தில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் மணிமண்டபத்தில் பரபரப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாரங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகு முத்துக்கோனில் மணிமண்டபம் உள்ளது இங்கு ஆண்டு தோறும் அவரது பிறந்தநாளில் அரசு சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் இந்நிலையில் இன்று வீரன் அழகு முத்துக்கோனின் 265 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில் எம் பி கனிமொழி, அமைச்சர்கள் கீதாஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆகியோர் வீரன் அழகு முத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் அவசரமாக அங்கிருந்து சென்றனர்.

அப்போது வீரன் அழகு முத்துக்கோனின் வாரிசுகளுக்கு உரிய மரியாதை செலுத்தவில்லை என கூறி அங்கு வந்திருந்த வாரிசுத்தார்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு அங்கிருந்து அரசு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாரிசுதாரர் வனஜா யாதவ் செய்தியாளர்களும் கூறுகையில் :


கடந்த கால ஆட்சியில் தங்களுக்கு அரசு சார்பில் உரிய மரியாதை அளிக்கப்படுவதாகவும் தற்போது இந்த ஆட்சியில் வீரன் அழகு முத்துக்கோனின் வாரிசுகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனவும் கூறினர் தாங்கள் வெளியூரில் இருந்து வந்து கடந்த இரண்டு நாட்களாக இங்கே தங்கி இருந்து பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் எங்களை அவமரியாதை செய்துள்ளதாகவும் மேலும் அரசு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து இடம் பெறவில்லை தேசிய கீதமும் இடம்பெறவில்லை என்று கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )