“அவ்வையார் கோவில் மகா கும்பாபிஷேகம் “

தஞ்சை அருகே அவ்வையார் கோவிலில் கோவை காமாட்சி புரி ஆதினம் சிவலிங்கே ஸ்வரசாமி, தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
திருவையாறு, வடக்கு வீதியில் கலைவேந்தன், என்று தமிழ் ஆர்வலர் தன் முயற்சியால் தமிழ் அன்னை அவ்வைக்கு கோவில் அமைத்து பொதுமக்கள் வழிபாட்டு வந்தனர்.
இத்திருக்கோவில் புதுப்பிக்கப்பட்டு யாகசாலை அமைத்து கடந்த மூன்று நாட்களாக தமிழ் முறைப்படி யாகம் நடைபெற்றது.
புனித தீர்த்தை யாகசாலையில் இருந்து மேளதாளங்களுடன் கொண்டு வந்து அன்னை அவ்வையார்,கோபுர கலசத்தில் கோவை காமாட்சி புரி ஆதினம் சிவலிங்கே ஸ்வரசாமி, புனித நீரை ஊற்றி கோபுர கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தனர்.
அதன் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
CATEGORIES தஞ்சாவூர்
