அ.தி.மு.க., பொன் விழாவை முன்னிட்டு, கோவில்பட்டியில் நடந்த கிரிக்கெட் போட்டி
அ.தி.மு.க., பொன் விழாவை முன்னிட்டு, கோவில்பட்டியில் நடந்த கிரிக்கெட் போட்டி.

அ.தி.மு.க., பொன் விழாவை முன்னிட்டு, கோவில்பட்டியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார்.
அ.தி.மு.க.,வின் 50ம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அன்னை தெரசா நகரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தோணுகால் கே.கே.ஆர்., அணி முதல் பரிசையும், கோவில்பட்டி வாரியர்ஸ் அணி 2ம் பரிசையும், விளாத்திகுளம் அணி 3ம் பரிசையும் தட்டிச் சென்றன.தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, கோவில்பட்டி யூனியன் துணைத் தலைவர் பழனிசாமி தலைமையில் நகரமன்ற உறுப்பினர் கவியரசன், முன்னிலையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அணியினருக்கு முறையே ரூ.20 ஆயிரத்து 1, ரூ.10 ஆயிரத்து 1, ரூ.5 ஆயிரத்து 1 ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில்,ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் பழனிகுமார், முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
