அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா: தஞ்சையில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பி.எஸ். அணி சார்பில் மரியாதை.
தஞ்சாவூர்,
அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொன்விழா நிறைவு விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை ரயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதற்காக தஞ்சை ஆத்துபாலத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரயிலடியை வந்தடைந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு கரந்தை பகுதி செயலாளர் அறிவுடைநம்பி தலைமை தாங்கினார்.
திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன், ஒன்றிய செயலாளர்கள் துரை வீரணன், சாமிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பகுதி செயலாளர்கள் ரமேஷ், சாமிநாதன், சண்முக பிரபு, மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதா ராணி ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தவமணி, அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் வீரராஜ்,
ஊராட்சி மன்ற தலைவர்கள் சத்யராஜ், லதா செந்தில்குமார், குழந்தையம்மாள் ரவிச்சந்திரன், சேகர், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் திருமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலு, மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.