BREAKING NEWS

ஆக்கிரமிப்பில் உள்ள வாய்க்கால் குளங்களை மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்.

ஆக்கிரமிப்பில் உள்ள வாய்க்கால் குளங்களை  மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே சங்கரன்பந்தல் இலுப்பூர் ஊராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர்.

இலுப்பூர் ஊராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் வாய்க்கால், குளங்கள் மீட்க வேண்டும், சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் சாலையை மறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இலுப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கதிரவன் ( 36) அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் வாய்க்கால், குளங்களை மீட்டுத்தர வலியுறுத்தி கடைவீதி அருகில் உள்ள செல்போன் டவர் உச்சியில் ஏறி தலைகீழாக நின்று சுமார் 4 மணி நேரம் நூதனம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்த சீர்காழி காவல்துறை கண்காணிப்பாளர் லாமேக், தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, ஒன்றிய ஆணையர் மஞ்சுளா உள்ளிட்ட அதிகாரிகள் இளைஞரிடம் ஒலிபெருக்கி மூலம் தங்கள் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் கதிரவனை தண்ணீர் கொடுத்து பாதுகாப்பாக கீழே கொண்டுவரப்பட்டார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் மயிலாடுதுறை பொறையார் போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது

படவிளக்கம்: 1.சங்கரன்பந்தல் கடைவீதியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான நீர் நிலைகளை மீட்க வலியுறுத்தியும், வீரசோழன் ஆற்றில் சாக்கடை நீர் கலைப்பதை தடுக்க வலியுறுத்தி இலுப்பூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது,2. செல்போன் டவரில் ஏறு தலைகீழாக நிற்கும் வாலிபர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )