BREAKING NEWS

ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்காசி சித்ரா நதிக்கரையில் தர்ப்பணம் செய்ய மக்கள் குவிந்தனர்

ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்காசி சித்ரா நதிக்கரையில் தர்ப்பணம் செய்ய மக்கள் குவிந்தனர்

பொதிகை மலையில் உருவாகி தென்காசி உட்பட தென்மாவட்டங்களில் பாயும் சித்ரா நதி, கங்கை, காவிரி நதிகளுக்கு இணையான பெருமையும் கீர்த்தியும் கொண்டது. தென்காசி நகரில் இந்த நதி பாய்ந்து செல்லும் இடத்தில்( யானை பாலம்) காவேரி அம்மன் கோவில், கோமதி அம்மாள் சமேத சங்கரநயினார் கோவில் அமைந்துள்ளது. இந்த சித்ரா நதி தீரத்தில் ஆண்டு தோறும் ஆடி, தை அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு இங்கு அதிகாலையிலேயே கூட்டம் அலைமோதியது.

பொதுமக்கள் நீண்ட கியூவில் நின்று முன்னோர்களை நினைத்து ,வணங்கி தர்ப்பணம் செய்தனர்.

ஜோதிட ரீதியாக பார்த்தால் இருப்பதிலேயே “பித்ரு தோஷமே” தலையாய தோஷமாக கருதப்படுகிறது. பித்ரு தர்ப்பணத்தை முறையாக செய்து குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யும் ஒருவரை எந்த தோஷமும் பாதிப்பதில்லை என்பது நம்பிக்கை. முன்னோர்களின் ஆசிர்வாதம் இவர்களை கவசமாக பாதுகாப்பதாக சாஸ்திரம் கூறுகிறது.

மேலும் தென்காசி நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்தமைக்கு பொதுமக்களும் சிவனடியார்களும் நன்றியும் வாழ்த்துக்களையும் கூறினார்கள் ஆண்டுதோறும் நகராட்சி அதிகாரிகள் என ஊழியர்கள் செய்து வரும் இப்ப பணி மகத்தானது என்றனர்

CATEGORIES
TAGS