ஆடி அமாவாசை சடங்குகளை காவரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்.

கும்பகோணம்: கொரோனா தொற்று மிக வேகமாக பரவி இருந்த நிலையில் இந்த சடங்குகளை காவிரி ஆற்றின் கரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் பொதுமக்கள் கூடாமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆடி அமாவாசை தினம் இன்று விமர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பலர் கும்பகோணத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். மேலும் தங்களுடைய முன்னோர்களுக்கு அவர்களது நினைவாக திதி கொடுப்பதற்காக ஆடி அமாவசை தினத்தன்று கும்பகோணத்தில் மகாமகக்குளம், பகவத்படித்துறை, சக்கரப்படித்துறை ஆகிய இடங்களில் பூஜை பொருட்களை வைத்து வேத மந்திரங்களை சொல்லி முன்னோர்களையும், இஷ்ட தெய்வங்களையும் வழிபடுவது வழக்கம்.
இதனால் காவிரி ஆறு, மகாமகக்குளம் ஆகியற்றின் கரை பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி இந்த சடங்குகளை மேற்கொண்டனர். பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு உபகரணங்களுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
