BREAKING NEWS

ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல்: ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன்கோவில், அபிராமி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

 

திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள வண்டிகருப்பணசாமி கோவிலில் ஆடிமாதம் முழுவதும் கிடாவெட்டி வழிபாடு நடத்துவது வழக்கம். புதிய வாகனங்கள் வாங்குபவர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வதும், தொழில் தொடங்குபவர்கள் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதும் வருடந்ேதாறும் ஆடிமாதத்தில் நடைபெறும்.

 

கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கால் இதுபோன்ற வழிபாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று வண்டிகருப்பணசாமி கோவிலில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கிடாவெட்டி சிறப்பு வழிபாடு செய்தனர். இதனால் வெறிச்சோடி கிடந்த கோவில் வளாகம் இன்று பக்தர்களால் களைகட்டியது. இதேபோல பல்வேறு குலதெய்வ கோவில்களிலும் பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )